loading

 

 

 

வாஸ்து

 

 

 

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்

 

ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது. வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி.

 

புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று. கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது. வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன. நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது (Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும், இருளையும் குறிக்கிறது. துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது. (எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.

Mr.M.Prabaharan is one of the eminent Vasthu Expert in India offering his services in TamilNadu, Karnataka, and Andhra Pradesh. He provides consultation on Vasthu Consultancy Services, Vasthu Direction, Vasthu Shastra Consultant, Vasthu Tip, Vasthu Facing, Vasthu Shastra Consultancy etc. Mr.Prabaharan differentiate himself from all other Vasthu specialists by integrate latest technological advancements with traditional wisdom. Astro Vasthu consultancy is amongst very few consultants in Chennai and TamilNadu who have expertise in corrections without demolitions. We have achieved expeditious qualification from the prominent institutes of India.

 

முன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients

 

ஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர். பூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர். 24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள். எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும்.

 

நேரமும் செயல்களும் Time and Activity

 

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன் தென்திசையில் உள்ளது. இதுஉறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி 3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன் வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது. படிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த இடம். மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம் வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி 9லிருந்து நள்ளிரவு வரை. சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது. மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம். நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில் உள்ளது. இது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம். விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், போன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம்.

 

வாஸ்து மிக முக்கிய குறிப்புகள்

 

  1. மனை சதுரம் மற்றும் செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும்.
  2. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பார்த்த மனைகள் நல்லது.
  3. வடக்கு மற்றும் கிழக்கில் காலி இடம் அதிகம் விட்டு கட்டுவது நல்லது.
  4. காம்பவுண்டு சுவரின் எந்த பகுதியிலும் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது.
  5. வீட்டை சுற்றி வர வழி வேண்டும்.
  6. எந்த மூலையையும் வளர்க்கக்கூடாது.
  7. சமையலறை தென்கிழக்கில் மட்டும் தான் வைக்க வேண்டும்.
  8. தம்பதிகள் படுக்கும் அறை தென்மேற்கில் அல்லது தெற்கில் மட்டும் தான் வைக்க வேண்டும்.
  9. போர், கிணறு வடகிழக்கில் வடக்கு அல்லது கிழக்கில் அமைக்கலாம்.
  10. தென்மேற்கு மூலை சரியாய் 90 டிகிரிக்கு இருக்க வேண்டும்.
  11. வடகிழக்கு பள்ளமாகவும் அதைவிட வாயுமூலை சற்று உயரமாகவும், வாயுமூலையை விட அக்னி மூலையை உயரமாகவும், அக்னி மூலையை விட தென்மேற்கு மூலை உயரமாகவும் இருக்கவேண்டும்.
  12. வடகிழக்கில் பூஜை ரூம், கழிவறை, குளியலறை, செப்டிக் டேங்க் வரக்கூடாது.
  13. நைருதி மூலையில் பூஜை அறை, கழிவறை, தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் கூடாது.
  14. வாயு மூலையில் கன்னிப்பெண்கள் உபயோகிக்க தடைபட்ட திருமணம் சீக்கிரம் நடக்கும்.
  15. தினசரி வரவு செலவை வாயுமூலையில் செய்யவேண்டும்.
  16. திசைகாட்டிக்கு சரியாக வீட்டின் திசையை மாற்றக்கூடாது. தெருவை அனுசரித்துதான் வீடு கட்டவேண்டும்.
  17. மழைநீர் சேகரிப்பு ஈசானியத்தில் வைத்து கொள்ளலாம்.
  18. எக்காரணம் கொண்டும் எந்த கடவுளையும் தெற்கு நோக்கி வைத்து வழிபடக்கூடாது.
  19. வீட்டின் தலை வாயிலுக்கு எதிரே எந்த கம்பமும், மரமும் இருக்கக்கூடாது.
  20. தலைவாயில் பின்வாசல் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் நல்லது.
  21. செப்டிக் டெங்க் வீட்டின் அஸ்திவாரத்துடன் இணையக்கூடாது.
  22. செப்டிக் டெங்க் காம்பௌண்ட் சுவருடன் இணைக்கக்கூடாது.
  23. தலைவாயில் கதவு திறந்து மூடும்போது கிரீச் போன்ற சத்தம் வரக்கூடாது.
  24. படுக்கை அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது

வீடு கட்டுவதற்க்கு பல சோதனைகளில் புஷ்ப சோதனை என்றும் ஒன்று உள்ளது. இந்த சோதனை மூலம் பின்னால் நடக்கும் விசயங்களை காட்டும் கண்ணாடி என்றே சொல்லலாம்....ஜாதகம் இல்லாதவற்களுக்கு இந்த இடத்தின் மூலம் ஜாதகருக்கான நன்மை தீமை அறிய பயன்படுகிறது.

"தாழ்விலா மனையின் மீது சதுரமாயொரு
முழத்தி லாழமுமகலங் கெல்லி யதனுணீர்
பூவைவிட்டால் வாழ்க திரிவனே நோக்கி வலம்பரிந்தோடில்
வாழ்வார் சூழ்க திரிடமாய்ச்சுற்ற சொல்மனை யெடுக்கத்தீதே" என்பது மயன் வாக்கியம்.

மனையின் நடுவில் நற்சதுரமாக ஒரு முழம் அளவு ஆழம் கொண்ட குழியைத் தோண்டி அதில் நிரம்பும் அளவு தண்ணீர் விட்டு ஒரு மலரை எடுத்திக் கொண்டு சிவபெருமானை மனதில் தியானம் செய்து அந்த தண்ணீரின் நடுவில் விடவும்,அந்த பூவானது வலமாக சுற்றி வருமானால் நல்ல வாழ்வும்,கீர்த்தியும்,சம்பத்தும்,ராஜபோகமும் அமையும்,.

இடது புறமாக சுற்றி வந்தால் அங்கு எடுக்கபடும் மனை அதிக துன்பங்களை கொடுக்கும் என்பது வாஸ்து சாஸ்திர விதி.

இவ்வாறு சுற்றி வந்த மலர் நிற்க்கும் இடத்திற்கு என்று தனிபலன் உண்டு அவை

  1. ஈசானிய மூலை (வடகிழக்கு) வந்து நின்றால் தீர்க ஆயுளும்,புத்திர சம்பத்தும்,கனத்த ஐஸ்வரியமும் கிடைக்கப்பெருவதோடு,அனைவருக்கும் தானம் தர்மம் செய்பவராக எல்லாரும் போற்றும் படியாக வாழ்வார்கள்.
  2. இந்திர திசை (கிழக்கு) வந்து நின்றால் தனதான்ய வருத்தியும்,சந்தான பாக்கியமும்,சுக போகமும்,பசு கன்று விருத்தியும் உண்டாகி,ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழ்வார்கள்.
  3. அக்கினி திசை (மேற்கு) வந்து நின்றால் கற்பு நிலை பொருந்திய இல்லதரசி மலடி ஆவாள்,விச சந்துக்களாலும் பயம் ஏற்படும்.அக்கினி,திருடர்களாலும் பொருள் சேதம் ஏற்படும்.
  4. இயமன் திசை (தெற்க்கு) வந்து நின்றால் மனதில் சிந்தையும்,அனுகூலமான விசயமும்,நோய் நொடிகளும்,பயம் போன்றவையும் ஏற்படும்.
  5. கன்னி மூலை (தென்மேற்க்கு) வந்து நின்றால் பொருளும் அன்னமும் விருத்தியாகி,என்னாலும் நீங்காத செல்வமும்,நல்ல குணமான நல்லோர் சந்திப்பும் ஏற்பட்டு மன மகிழ்ச்சி பெருவார்கள்.
  6. வருணன் மூலை (தென் கிழக்கு) வந்து நின்றால் நினைத்த காரியமும்,ஆராபித்த காரிய வெற்றியும் ஏற்படும்,செல்வம் குறையாமல் இருக்கும்.
  7. வாயு மூலை (வடமேற்க்கு) வந்து நின்றால் காச நோய் தொத்ரவும்,பொருள் சேதமும்,ஆகி அனைத்து செல்வமும் குறையும்.
  8. குபேர திசை (வடக்கு) வந்து நின்றால் தனதான்ய விருத்தியும் ,சபை கவுரமும்,தர்ம சிந்தனையும் பெற்று,ஆபத்துக்கு உதபுபவாரக இருப்பார்கள்.மகா பண்ணியவான் என்று மற்றவர்களால் புகழ படுவார்கள்,

 

வீட்டு வாசல்

 

 

இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல்

 

பின்வரும் இலக்னத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசைகளினை நோக்கி வீடுகளை அமைத்துக் கொண்டால் அவர்களது வாழ்வு சிறப்பாக விளங்கும் என்பது நம்பிக்கை

ரிசபம், கன்னி, மகர இலக்னம் - தெற்கு பார்த்த வீடு

கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு பார்த்த வீடு

மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு பார்த்த வீடு

மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு பார்த்த வீடு